உத்தர பிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதல்: 12 பேர் பலி, 40 பேர் காயம்

புதன், 1 அக்டோபர் 2014 (11:20 IST)
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு இரு ரயில்கள் மோதியதில் 12 பேர் பலியாகிவிட்டனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
 
கிரிஷாக் எக்ஸ்பிரஸ் வாரணாசியிலிருந்து கோரக்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது லக்னோவிலிருந்து பராவ்னி பின்னால் சென்றுகொண்டிருந்தது.
 
அப்போது எதிர்பாராத விதமாக நடந்த மோதலில் பராவ்னி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி எறியப்பட்டன.
 
இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவத்தால் கோரக்பூர்-வாரணாசி பாதையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25ஆயிரமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க அறிவித்துள்ளது.
 
கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகரில் நேற்றிரவு 10:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலின் வழித்தடத்தை மாற்றுகையில் இவ்விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சதான்ந்த கவுடா விபத்து குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லடசமும் ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று சதானந்தகவுடா அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்