உர்ஜித் படேல் நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக கடிதம்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2017 (16:40 IST)
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்  நாடாளுமன்ற குழு முன்பு ஜனவரி 28ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து 10 கேள்விகள் கேட்க உள்ளது. 


 

 
மூத்த காங்கிரஸ் தலைவர் கே வி தாமஸ் தலைமையிலான இந்த பொது கணக்கு குழு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலை நாடாளுமன்ற குழு முன்பு ஜனவரி 28ம் தேதிக்குள் ஆஜராக கடிதம் அனுப்பியுள்ளானர். அவரிடம் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து 10 கேள்விகள் கேட்க உள்ளனர்.
 
ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு முன்னர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள் குறித்த தகவலை வெளியிட மறுத்தது ஏன்?
 
ஏன் கடந்த இரண்டு மாதங்களில் மத்திய ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகள் தோல்வியில் முடிந்தது? போன்ற கேள்விகளை அவரிடம் கேட்கப்பட உள்ளது.
அடுத்த கட்டுரையில்