மாஃபியா கைதி முதல் பிக்பாக்கெட் கைதி வரை ஒரே உணவு: உபி முதல்வர் உத்தரவு

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (05:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே அவ்வப்போது அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது அவர் சிறைத்துறையிலும் தனது அதிரடியை காட்ட தொடங்கியுள்ளார்.



 


உ.பி.யில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பெரிய மாஃபிய டான்கள் முதல் சாதாரண பிக்பாக்கெட் குற்றவாளிகள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவையே வழங்க வேண்டும் என்று நேற்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

உபி சிறையில் ஒருசில கைதிகளுக்கு மட்டும் சிறப்பு உணவும் சாதாரண கைதிகளுக்கு சுமாரான உணவும் வழங்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து முதல்வர் யோகி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை கண்டிப்பாக சிறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும், அவ்வப்போது சோதனை நடத்தப்படும்போது தவறு நடப்பது தெரியவந்தால் அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் ஒருசில குற்றவாளிகள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லவும் அனுமதிக்க நிச்சயம் கூடாது என்று கடும் உத்தரவிட்டுள்ளார் யோகி.

 

வெப்துனியாவைப் படிக்கவும்