அமீர்கானின் மனைவி மும்பையிலிருந்து வெளியேற்றம்: பதற்றம்

புதன், 25 நவம்பர் 2015 (20:59 IST)
அமீர்கானின் மனைவி கிரணும் அவரது மகன் ஆசாத்தும் மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து பத்திரமாக வெளியேற்றபட்டுவிட்டதாக கூறப்படுகிறது.


 


சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக அமீர்கான் கருத்து தெரிவித்தார். இதனால் சிவசேன உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் இவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அமீர்கானின் மனைவி கிரணும் அவரது மகன் ஆசாத்தும் மும்பையில் உள்ள வீட்டிலிருந்து பத்திரமாக வெளியேற்றபட்டுவிட்டுனர். இதனால் மும்பையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
 
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் ஏராளமானோர் தங்கள் விருதுகளை திருப்பித் தந்தனர். மேலும் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
 
அந்த கருத்துக்களை, பாஜாக வினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. 
 
இந்நிலையில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அமீர்கான் “இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற செயல்களைப் பார்த்து பயந்த எனது மனைவி, என்னிடம் நாட்டைவிட்டு போய்விடலாமா என்று கேட்டார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு சிவசேனை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அமீர்கானின் மனைவி கிரணும் அவரது மகன் ஆசாத்தும் மும்பையில் உள்ள வீட்டிலிருந்து பத்திரமாக வெளியேற்றபட்டுவிட்டுனர். அவர்கள் வெளியூருக்கு அனுப்பப்ட்டுள்ளதாக ஒரு தகவலும், வெளிநாட்டுக்கு அனுப்பப்பபட்டதாக மற்றோரு தகவலும் வெளியாகி உள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்