பண தட்டுப்பாடு மாணவனை பலி வாங்கிய பரிதாபம்: கட்டணம் செலுத்த இயலாமல் தூக்கு

புதன், 23 நவம்பர் 2016 (17:01 IST)
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றினைச் சேர்ந்த சுரேஷ் [வயது 18] என்பவர் அங்குள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். செமஸ்டர் தேர்வுகள் நெருங்குவதால், தேர்வுக்கட்டணம் செலுத்துமாறு அவரை கல்லூரி நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

சுரேஷ் சில நாட்களாக வங்கியில் பணம் எடுக்க முயற்சித்தும் அவரால் பணம் எடுக்க இயலவில்லை. இதனால், குறிப்பிட்ட தேதியில் அவரா, பணம் செலுத்த முடியவில்லை. மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை அன்றும் பணம் எடுக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இதனால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சுரேஷ், வீட்டில் மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வுக் கட்டணத்துக்கான பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத விரக்தியில் சுரேஷ் தலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்