யுஜிசி நெட் தேர்வு அட்டவணை வெளியீடு! நுழைவுச்சீட்டு வழங்கப்படுவது எப்போது?

வெள்ளி, 17 நவம்பர் 2023 (16:45 IST)
யுஜிசி நெட் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்குவது எப்போது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கான யுஜிசி நெட் என்ற தகுதி தேர்வின் அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன் படி டிசம்பர் 6ஆம் தேதி இந்த தேர்வு தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  

மாணவர்கள் எந்த நகரத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பதை பத்து நாட்களுக்கு முன்பு இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும்  அனைத்து தேர்வுகளிலும் இரண்டு வேளைகளில் இந்த தேர்வு நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ள nta.ac.in. என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் என்றும் தேர்வு அட்டவணையையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்