Udaipur murder: தீவிரவாத தாக்குதலா? விசாரணையில் NIA !!

புதன், 29 ஜூன் 2022 (11:47 IST)
கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ராஜஸ்தான் சென்றுள்ளது. 

 
ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த டெய்லர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கன்னையா லாலை (டெய்லர்) கொலை செய்த 2 பேரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரிக்கிறது. கன்னையா லால் கொல்லப்பட்ட விதம், ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்யும் பாணியை ஒத்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்த நிலையில் அந்த கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்