காதல் பிரச்சனை : ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்

புதன், 20 ஜனவரி 2016 (15:09 IST)
தங்களுடைய காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், சகோதரிகள் ஒரே சேலையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூர் பாலாஜி லே அவுட் பகுதியில் வசிப்பவர் மல்லேசப்பா. அவருக்கு தேஜஸ்வினி(22), ரஞ்சிதா(20) என இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்களு இருவரும் ஆளுக்கொருவரை காதலித்து வந்தனர். அதிலும், தேஜஸ்வினி வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார்.
 
தங்கள் காதல் விவகாரங்களை, அவர்களது தந்தையிடம் கடந்த 18ஆம் தேதி இரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கும், இரு மகள்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதன் பின் மல்லேசப்பா உறங்கச் சென்று விட்டார். அதிகாலை எழுந்து அவர் பார்த்தபோது, அவரது இரு மகள்களும் ஒரே சேலையில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 
 
உடனே போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, தற்கொலை செய்துகொண்ட இரு சகோதரிகளின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தனர். அதில் “எங்களை இத்தனை வருடங்கள் பாசமாக வளர்த்ததற்கு நன்றி. எங்கள் தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்