சிக்கியது அபூர்வ இருதலை கண்ணாடி வீரியன்! – வைரல் வீடியோ!

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (12:29 IST)
மிகவும் அபூர்வமானதும், அபாயமானதுமான இருதலை கண்ணாடி வீரியன் பாம்பு மும்பை பகுதியில் காணக்கிடைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகர் பகுதியான கல்யாண் குடியிருப்பில் இரண்டு தலை பாம்பு ஒன்று செல்வதை கண்ட மக்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிபயங்கரமான விஷத்தன்மை கொண்ட கண்ணாடி வீரியன் வகை பாம்பான அதற்கு 2 தலைகள் இருந்ததுடன், 11 செ.மீ நீளம் உள்ள சிறிய பாம்பாக இருந்துள்ளது.

பிடிப்பட்ட பாம்பு குறித்து வனத்துறை அதிகாரி சுசாந்த நந்தா “அசாதாரணமான மரபணு கொண்ட கட்டு வீரியன் பாம்புகள் வீதம் காடுகளில் குறைந்து வருகிறது. மிக அபூர்வமாக ஏற்படும் மரபணு மாற்றத்தால் இந்த பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன. இதன் விஷம் எவ்வளவு ஆபத்தானது என்றால் இது கடித்து நீங்கள் பிழைத்தாலும், கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என கூறியுள்ளார்.

இந்திய பாம்பு வகைகளில் மிக ஆபத்தான பாம்புகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் கண்ணாடி வீரியன் பாம்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Double danger

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்