மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இது சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயலாகும் என விமர்சித்தன. ஓட்டு சேகரிப்பில் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவான ஓட்டுகள் அதிகமானதால் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ், திமுக கட்சிகள் எதிராக வாக்களித்தன. இறுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்தது. இதனால் முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.