வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் ஒடிசா மாநிலத்தில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. மேலும் இன்று கடலோரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஒடிசாவில் ரயில் பாதையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தண்ணீரில் சிக்கிக் கொண்டது.
புவனேஸ்வரில் இருந்து ஜெகதல்பூர் நோக்கி சென்ற கிராகந்த் எக்ஸ்பிரஸ் ரயில் ராயகடா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியது. ரயில் சென்று கொண்டிருக்கும்போது கல்யாணி ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஆனால், ரயில் ஓட்டுநர் வெள்ளத்தை பார்த்து அஞ்சாமல், மிகவும் சிரமமப்பட்டு ரயிலை நிறுத்தினார். உடனடியாக ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சற்று நேரத்திற்கு பிறகு தண்ணீரின் அளவு குறைந்தவுடன் மீண்டும் ரயில் இயக்க்கப்பட்டது.