இன்று குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: வெற்றி பெறுவது யார்?

சனி, 5 ஆகஸ்ட் 2017 (08:17 IST)
சமீபத்தில் குடியரசு தலைவர் தேர்தல் முடிந்து 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



 
 
பாஜக கூட்டணியின் சார்பில் வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக உள்ளனர். ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 58 எம்.பி-க்கள் இருப்பதால் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. காங்கிரஸை அடுத்து பாஜக 56 எம்பிக்களுடன் 2 வது இடத்திலும் உள்ளது.
 
இருப்பினும் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உள்ளதால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக வேட்பாளரான வெங்கைய நாயுடுவுக்கு, லோக்சபாவில் 337 உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபாவில் 80 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. எனவே இவர்கள் அனைவரும் செல்லாத ஓட்டு போடாமல் சரியாக ஓட்டு போட்டால் நிச்சயம் வென்றுவிட்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்