மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்: வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (07:14 IST)
மீனவர் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
 
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரின் விடுதலைக்கு இந்திய வெளியுறவு துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில், "இரு நாட்டு மீனவர்களின் கைது என்பது வழக்கமாக நடைபெற்று வர கூடிய ஒன்றுதான்.
 
எனினும், இந்த பிரச்சினையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வுகளை காண இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
 
அத்தடன், இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்