நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

திங்கள், 2 மே 2022 (10:31 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்ள் அளிக்கப்பட்டுள்ளதாக  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 6-ஆம் தேதி வரை அவகாசம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே  15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
 
நீட் தேர்வுக்கு மே 15-ஆம் தேதி வரை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
 
நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்