தொடரும் செல்ஃபி சோகம்: மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

சனி, 13 பிப்ரவரி 2016 (11:53 IST)
கர்நாடக மாநிலம் ஹுலிவனா கிராமத்தில் உள்ள ஒரு பாசன கால்வாயில் செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.


 
 
கர்நாடகா, மாண்டியாவில் உள்ள மாண்டியா மருத்துவ அறிவியல் நிருவனத்தில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள் சிலர் தங்கள் இன்டர்ன்ஷிப்பை கெரகோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்து வந்தனர்.
 
இந்நிலையில் இவர்கள் அருகில் உள்ள பாசன காலவாய் ஒன்றில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஸ்ருதி, ஜீவன், கிரிஷ் மேலும் இவர்களுடன் இரண்டு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது மிகவும் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டு இருந்த இவர்கள் எதிர்பாரத விதமாக 20 அடி ஆழ நீரில் மூழ்கினர். இதில் இரண்டு மாணவர்கள் உள்ளூர் மக்களால் மீட்க்கப்பட்டனர். மேலும் மீட்க்கப்பட்ட ஜீவன் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.
 
மேலும் ஒரு மாணவரின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது. மாண்டியா வட்ட ஊரக இன்ஸ்பெக்டர் லோகேஷ் கூறும் போது, இந்த மாணவர்கள் அனைவரும் 24 வயதினர். இவர்கள் தங்கள் படிப்பின் இறுதியாண்டு படித்து வந்தவர்கள். கெரகொடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இண்டர்ன்ஷிப் செய்து வந்தவர்கள் என தெரிவித்தார்.
 
சமீபத்தில் இந்தியாவில் செல்ஃபி எடுக்க முயன்று, பலியாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்