இதனை தொடர்ந்து திருப்பதி லட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த அறிக்கை திருப்பதி பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்த்து மகாபாவம் செய்துவிட்டார்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.