ரூபாய் நோட்டுகள் மாற்றம் பிரசவம் போன்றது: வெங்கையா நாயுடு

புதன், 16 நவம்பர் 2016 (21:25 IST)
நாட்டில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியானது பிரசவம் போன்று நீண்ட காலத்திற்கு பலன் தரக்கூடிய தற்காலிக வலி என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.


 

 
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவையில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதத்தை தொடங்கினர்.  
 
விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். 
 
இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:-
 
ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான நடவடிக்கை, பிரசவத்தை போன்று தற்காலிக வலியானது. ஆனால் நீண்ட காலம் நன்மை தரக்கூடியது, என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்