பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

புதன், 17 டிசம்பர் 2014 (18:24 IST)
பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
மக்களவையில் இன்று சிட்னி தாக்குதல், பெஷாவர் தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய சுஷ்மா சுவராஜ், "ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என உலகின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு கண்டங்களில் உள்ள இரண்டு நாடுகளில் நடந்துள்ளன.
 
இந்தச் சம்பவங்கள் ஒரே ஒரு விஷயத்தையே சொல்கின்றன. அது, உலகில் அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் சமமாக இருக்கிறது என்பது.
 
ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டுவதற்கான அழைப்பு இது. அத்தகைய பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சிக்கு ஒத்துழைக்க இந்தியா தயாராக இருக்கிறது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்