கண்ணில் ஆசிட் ஊற்றுவோம்: அரசியல் பிரமுகர்களுக்கு மிரட்டல்...

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (16:05 IST)
காஷ்மீரி மாநிலத்தில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் அரசியல் கட்சி பிரமுகர்களை நேரடியாக மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. 
 
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முதல் மந்திரியாகவும், பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார்சிங் துணை முதல்வராகவும் ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. 
 
இதற்கு முன்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சி செய்தது. ஆனால் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் தேர்தலில் போட்டியிட்ட சிலரை சுட்டுக்கொன்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
 
தற்போது, அடுத்த மாதம் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இதனால் மீண்டும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காஷ்மீரில் அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் பயத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்