கடலுக்கடிலில் கோவில்; 6 மணி நேரம் மட்டுமே கண்ணுக்கு தெரியும் அதிசயம்!!
சனி, 15 ஜூலை 2017 (15:05 IST)
6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது. பாதி நேரம் கடலுக்குள் முழ்கியே காணப்படுகிறது.
கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு உள்ளே அமைந்துள்ளது. இரவு 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும்.
மதியம் 1 மணிக்கு மேல் கடல் உள்வாங்கி பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அன்றாடம் இந்த நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.