புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்!

புதன், 5 அக்டோபர் 2022 (16:46 IST)
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது நடத்திவரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்ற கட்சியை தேசிய கட்சியாக மாற்ற உள்ளார் என்பதும் இதனை அடுத்து தனது கட்சியின் பெயரை மாற்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை பாரத ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலை கணக்கில் கொண்டே தனது கட்சியின் பெயரை அவர் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று நடந்த கட்சியின் பெயர் அறிவிப்பு விழாவில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் பாரத ராஷ்டிரிய சமதி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்