தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் கிடுக்குப்பிடி

சனி, 5 செப்டம்பர் 2015 (11:21 IST)
தொலைபேசி அழைப்புகள் பாதியில் துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் சேவை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில நிறுவனங்களின் தரமற்ற சேவை காரணமாக வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுகின்றன. மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியது.

இந்த நிலையில்  தொலைபேசி அழைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இப்புதிய உத்தரவு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தறிய டிராய் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு குறித்து பொதுமக்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்