மக்கள் வரிப்பணத்தில் திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்திய முதல்வர்

வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:51 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு தெலுங்கு  மாநிலங்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.


 

மக்கள் வரிப்பணத்தில் இந்த காணிக்கைகளை செலுத்தியதால் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மக்கள் வரி பணத்தை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்துவவாய விட்டு இவ்வாறு கோயில்களுக்கு காணிக்கை செலுத்துவது சரியா எனவும்; தனது தணிப்பட்ட வேண்டுதலுக்கு மக்களின் வரிப்பணத்தை கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதா எனவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்