விபத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த வேடிக்கை மனிதர்கள்

வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:57 IST)
அரசு பஸ் மோதியதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றாமல், செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


 

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்வர் அலி (18). இவர் கொப்பல் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பணிக்கு தனது சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை காலை அன்வர் தனது சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். அப்போது, ஹொசபேட் நகரில் இருந்து ஹூப்ளி செல்லும் கர்நாடக அரசு பேருந்து அசோக சர்கிள் அருகே அன்வர் மீது மோதியது. இதில் அன்வர் படுகாயமுற்று இரத்த வெளியேற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

அன்வர் அடிபட்டு கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அவரை சுற்றி நின்று புகைப்படன் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

30 நிமிடங்கள் தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்றாமல், செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்