வகுப்பறையில் சிறுநீர் கழித்த நான்கு வயது சிறுமிக்கு தண்டனை கொடுத்த ஆசிரியர்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (16:55 IST)
ஆந்திராவில் வகுப்பறையில் சிறுநீர் கழித்த நான்கு வயது சிறுமியை வெயிலில் வெட்டவெளியில் உள்ள ஒரு இரும்பு தகடு மீது அமரவைத்து தண்டனை கொடுத்த ஆசிரியரைப் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.


 
 
ஆந்திராவில் எலுரு எனும் பகுதியில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் படிக்கும் ஒரு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சம்பவத்தன்று அந்த வகுப்பறையில் நான்கு வயது சிறுமி சிறுநீர் கழித்துவிட்டாள்.
இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுமியை மதிய நேரத்தில் கொளுத்தும் வெயிலில் மைதானத்தில் இருந்த இரும்பு தகடு மீது அமர வைத்துவிட்டார்.
 
வீட்டிற்கு வந்த குழந்தையை கவனித்த பெற்றோர்கள், சிறுமியின் அந்தரங்கப் பகுதியில் சில கொப்பளங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தும் அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இதனால் அந்த குழந்தையின் பெற்றோர்கள், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை மீது புகார் கொடுத்தனர். இந்த விஷயம் வெளியே கசிய ஆரம்பித்ததும், அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அந்த பள்ளியின் வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.
 
இதற்கிடையில், மாநில குழந்தை நல உரிமை ஆணையம் இது பற்றி விளக்கம் அளிக்குமாறு அந்த மாவட்ட கலெக்டருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்