செம்மரம் கடத்திய தமிழக போலீசார் கைது

வியாழன், 11 பிப்ரவரி 2016 (01:30 IST)
திருப்பதியில் செம்மரத்தை வெட்டி கடத்த முயன்ற தமிழ போலீசார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
திருமலை, திருப்பதியில் அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. இதன் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழர்கள் 10 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர்.
 
அடுத்து, திருச்சானூர் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஒரு காரில் கடத்தப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  செம்மரக்கட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
இந்த கடத்தலில் ஈடுபட்ட வேலூர் போக்குவரத்து காவல்துறை வார்டன் சதீஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார்  கைது செய்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்