கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி!

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (12:44 IST)
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கேரள மாநிலத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 30கிலோ தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவை சமீபத்தில்  தேசிய புலனாய்வு முகமை பெங்களூரில் கைது செய்து அதன்பின் கொச்சி வந்தனர். அவரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் திவீர  விசாரணை மேற்கொண்டு வந்தனர்
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவை பெற்று என்.ஐ.ஏ அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக செய்தி வெளியானது
 
இந்த நிலையில் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு கொச்சி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் மீண்டும் ஸ்வப்னா ஜெயிலில் அடைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்