சுஷ்மா சுவராஜ் எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 8 நவம்பர் 2016 (10:20 IST)
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 7.22 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.


 
 
ஏற்கனவே சுஷ்மா சுவராஜ் கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அட்மிட் ஆகியிருக்கிறார்.
 
சர்க்கரை நோய் மற்றும் உடல் உபாதைகள் காரணமாக சுஷ்மாவுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து இரவு 7.22 மணியளவில் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் நியூரோ சென்டரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மருத்துவர் பல்ராம் ஐரான் மேற்பார்வையில் அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு எண்டோகிரினோலோஜிகல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்