சர்ஜிக்கல் தினம் : எதிர்கட்சிகளின் எதிர்ப்பு

சனி, 22 செப்டம்பர் 2018 (15:58 IST)
பிரதமர் நரேந்தர மோடியின் ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு 29 ஆம் தேதி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம் அங்கிருந்த பயங்கரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் தாக்குதல் நடத்தியது. அதில் பல பயங்கரவாதிகளையும் கொன்று வெற்றிகரமாக இந்தியாவுக்கு திரும்பினர்.


தீவிரவாதத்தை ஒழிக்க தாக்குதல் நடத்திய இந்த தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும்,கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது:



பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள சிபில் பிரதமர் மோடியை பெருமை படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்த உத்தரவிடுள்ளதாக மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதே போல மேற்குவங்க  கல்வி துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி கூறும் போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த அரசு யு.ஜி.சியை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ஜிக்கல் தினம் பல்வேறு கட்சி தலைவர்களிடையே விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்