லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே என்ஜினியர் மர்ம மரணம்: விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு

சனி, 3 அக்டோபர் 2015 (14:38 IST)
மேற்குவங்கத்தில் லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே என்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து   விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


 
 
மேற்குவங்கத்தில் உள்ள பணிமனையில் பொறியாளராக பணியாற்றியவர் சுரப் குமார். ரயில்வேக்களில் பயன்படாத பழைய இரும்புகளை பெறுவதில் சுரப் பிரபுவுக்கு சிலர் லஞ்சம் அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் அதனை ஏற்க மறுத்த சுரப் குமார் லஞ்சம் அளிக்க முன்வந்தவர்களின் டெண்டர்களை ரத்து செய்ததாவும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி சுரப் அவரது குடியிருப்பில்  மர்மமான முறையில் பிணமாக காணப்பட்டார். 


 
 
அவரது நகங்கள் நீலநிறமாக காணப்பட்டதால் பாம்பு கடித்ததால் மரணம் நிகழ்ந்திருக்கலாம்  என்று கருதி இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் லஞ்சம் வாங்க மறுத்ததால் தான் சுரப் குமார் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் படி ரயில்வே துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்