வீட்டில் புலி, வெளியில் எலி: நீதிமன்றத்தில் சரணடைந்த கர்நாடகா!

திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:03 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.


 
 
இதனையடுத்து கர்நாடக முதல்வர் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தண்ணீர் திறந்து விட்டாலும், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. இந்த புதிய மனுவை தாக்கல் செய்தது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காமல் செய்தது என நீதிபதிகள் கூறினர்.
 
இதற்கு பதில் கூறிய கர்நாடகா மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் இந்த மனுத்தாக்கல் எனக்கு தெரியாமல் நடந்தது எனவும், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் நடந்து வரும் போராட்டங்களையும், வன்முறையையும் கட்டுப்படுத்தாத கர்நாடகா, புதிய மனுத்தாக்கல் செய்து தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்