அம்மாடியோ… நொய்டா கட்டிடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன தெரியுமா?

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (11:36 IST)
சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் உள்ள கட்டிடம் குண்டு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது.


உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கட்டப்பட்ட 36 மாடிக் கொண்ட அடுக்கு மாடி இரட்டை கோபுரம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கவும், கட்டிடத்தில் இடம் வாங்கியவர்களுக்கு 14% வட்டியுடன் பணத்தை கட்டிட நிறுவனம் தர வேண்டும் என்று தீர்ப்பானது.

இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்காக 3,400 கிலோ வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டது. கட்டிட இடிபாடுகளை முழுவதுமாக அப்புறப்படுத்த 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டது.

மேலும் நொய்டா இரட்டை கோபுரத்தை இடிக்க 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது என்றும் அதற்காக 20 கோடி ரூபாய் செலவிட பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனம் தகர்க்கப்பட்டது. இதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடம் இடிக்கப்பட்டு, அதன் குப்பைகளை அகற்ற ஆகும் செலவுக்காக நாங்கள் ரூ.17.5 கோடி தந்துள்ளோம் எனவும் மொத்தம் 8 லட்சம் சதுரடியில் 900க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த இரட்டை கோபுரங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.700 கோடிக்கு மேல் என சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்