ஹவாலா பணம் டெபாசிட்: கேரள வங்கியில் சிபிஐ அதிரடி சோதனை!!

வியாழன், 22 டிசம்பர் 2016 (11:32 IST)
கேரளாவில் கூட்டுறவு வங்கி சங்கங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


 
 
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுவதாகவும், போலி கணக்குகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஹவாலா பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் வந்த புகார்களின் பெயரில் இந்த ரெய்டு நடந்துள்ளது.
 
கேரளாவில் உள்ள கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் நடத்தினர்.
 
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.266 கோடி சிக்கியது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்பவம் கேரளா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்