ஜெயலலிதா மரணத்தினால், அதிமுக நிச்சயமாக உடைவது உறுதி. எனெனில் சசிகலா கட்சி பொறுப்பை ஏற்க நினைத்தால் ஆட்சியையும் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பார். இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தால் சுதந்திரமாக செயல்பட முடியாது.
ஆனால், பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தம்முடைய குடும்பத்தில் இருந்து ஒருவரை சசிகலாவுக்கு எதிராக முன்னிறுத்துவார். ஆனால், அவருக்கு கட்சியில் செல்வாக்கு இல்லை.
அதேசமயம், சசிகலாவுக்கோ அரசியல் அறிவு இல்லை. எனவே என்ன நடந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சியையும், அளுமையையும் இருவராலும் ஈடுசெய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.