வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய்: மாணவர்களை கடித்து குதறியது

வியாழன், 14 ஜூலை 2016 (16:30 IST)
வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய், மாணவர்களை கடித்து குதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காவாகுளம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  
 
நேற்று காலை துப்புரவு பணிப் பெண் ஒருவர் குடிநீர் தொட்டியில் மருந்து தெளிக்க பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை தெரு நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. பின்னால் வந்த நாயை அவர் கல்லால் அடித்துள்ளார்.
 
இதில், அந்த நாய் வகுப்பறைக்குள் ஓடியது. நாயை கண்டதும் வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். நாய் அவர்களை கடித்து குதறியது. அதில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
 
பின்னர் அந்த மூன்று மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்