நிதி நெருக்கடியில் மாநிலம்...வீட்டுக்கு ரூ 15 கோடி...வீடியோ கேம் விளையாடும் ’முதல்வர் ’

வியாழன், 7 நவம்பர் 2019 (16:59 IST)
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை மற்றும், லோக்சபா தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரமாநிலத்தில் கடும் நிதிநெருக்கடி நிலவுவதாகவும், ஆனால் தனது வீட்டின் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காக அரசு நிதியில் இருந்து ரூ. 15 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டுக்கு சாலை அமைத்தல், மின்சாரப் பணிகள், ஹெலிபெடு தளம் மற்றும் பொதுமக்களிடன் குறைகேட்கும் இடம் அமைத்தல் ஆகியவற்றிற்காக அரசு நிதியில் இருந்து, சுமார் ரூ. 15. 60 லடசம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலமே நிதி நெருங்கடியிக் சிக்கிக் கொண்டிருக்கையில், ஆந்திர முதல்வர் தன்  அரண்மனையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறார் என அந்த டுவிட்டில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

When Rome burned, Nero fiddled. When AP is burning under financial strain due to 5 months' misrule & construction workers are ending lives, the Nero of AP @ysjagan is busy playing video-games at his palatial home on which a staggering Rs.15.65 Cr was spent by the Govt. Shocking! pic.twitter.com/XeGK2OAZK4

— N Chandrababu Naidu (@ncbn) November 7, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்