புத்தரின் போதி மரத்தை வழிபட்ட இலங்கை அதிபர் சிறிசேனா

செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (20:15 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா புத்தகயாவில் உள்ள புத்தரின் போதி மரத்தை வழிபட்டார்.
 
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவில் 4 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானநிலையை அடைந்ததாக கருதப்படும் போதி மரம் அமைந்துள்ளது.

 
அங்குள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுற்றிப் பார்த்த சிறிசேனா வளாகத்தில் அமைந்திருக்கும் போதி மரத்தை தரிசித்து வழிபட்டார். அந்த போதி மரத்தை அவர் 15 நிமிடங்கள் வழிபாடு செய்த சிறிசேனாவுக்கு மஹாபோதி அமைப்பின் சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.
 
பின்னர் இங்கிருந்து விமானம் மூலம் அவர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இன்று இரவு திருப்பதியில் தங்கும் அவர் நாளை அதிகாலை சுப்ரபாத சேவையின்போது திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்