கேரளா பெண் சாமியாருக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசின் சாமியார் பாசம்!

புதன், 10 மே 2017 (17:26 IST)
யோகா குரு எனப்படும் சாமியார் பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து தற்போது இரண்டாவதாக கேரளா பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயிக்கும் இசெட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது மத்திய அரசு.


 
 
மாதா அமிர்தானந்தமயி கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அதனது ஆசிரமத்தை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆன்மீக நிறுவனங்களை நடத்தி வருகிறார். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறக்கட்டளைகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் 64 வயதான பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயிக்கும் அவரது ஆசிரமத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்ததை அடுத்து அவருக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இதன் மூலம் அவருக்கு சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். பாபா ராம்தேவுக்கு பிறகு இசெட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் இரண்டாவது ஆன்மீக தலைவர் மாதா அமிர்தானந்தமயி தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்