07113/07114 என்ற சிறப்பு ரயில் காக்கிநாடா நகரில் இருந்து இம்மாதம் 28, ஜனவரி 4, 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து இம்மாதம் 30, 6, 13, 20 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு காக்கிநாடா சென்றடையும்.
07009/07010 என்ற சிறப்பு ரயில் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து ஜனவரி 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, இரண்டாவது நாள் காலை 5 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.