பேருந்து ஸ்ட்ரைக் எதிரொலி: மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில் சேவை

ஞாயிறு, 14 மே 2017 (23:18 IST)
தமிழகத்தில் நாளை முதல் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை அடுத்து வெளியூரில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து வெளியூருக்கும் செல்லவுள்ள பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.



 


இதன்படி நாளை அதாவது மே 15 முதல் சென்னை எழும்பூர் - நெல்லை - சென்னை எழும்பூருக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவை - சென்னை சென்ட்ரல் - கோவைக்கும், என்னை எழும்பூர்-திருவாரூர்-சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்றும், சிற்பபு கட்டண ரயிலுக்காக முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவையிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 8 மணிக்கும், சென்னையிலிருந்து கோவைக்கு இரவு 8.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையிலிருந்து நெல்லைக்கு தினமும் காலை 7.40 மணிக்கும், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், இரவு 11.45 மணிக்கு திருவாரூரில் இருந்து சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்