சோனியா குடும்பம் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: மோடி தாக்கு

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (16:39 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.


 
 
திப்ருகார்க் மாவட்டத்தில் நடந்த இந்த தேர்தல் பேரணியில் பேசிய மோடி, ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என கடுமையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சாடினார். கடந்த மக்களவை தேர்தலில் அவர்கள் அடைந்த படுதோல்விக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் நாடளுமன்றத்தை முடக்குகின்றனர்.
 
மற்ற சில எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த முன் வரும் போது, இந்த ஒரே ஒரு கும்பம் மட்டும் மாநிலங்களவையை நடத்த தடையாக இருந்து வருகின்றனர்.
 
மேலும் பேசிய பிரதமர் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தருண் கோகாய் அரசு எந்தவித வளர்ச்சியை முன்னெடுக்கவில்லை. எனவே வரவிருக்கும் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்து அஸ்ஸாம் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்