சோனியா காந்தி - திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

வியாழன், 24 செப்டம்பர் 2015 (01:06 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை, காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று பிற்பகல் 12 மணி அளவில், காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசினார்.
 
அப்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் ஆந்திர மாநில அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
 
முதல்வர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம் செய்தார். இதனால் அவர் மீது வழக்கு பாய்ந்தது. காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம், டெல்லி தலைமைக்கு அவர் மீது அதிருப்பதி ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக காங்கிரஸ் பிரிவுக்கு மாநில தலைவர் மாற்றப்படலாம் என்ற பேச்சு ரெக்கை கட்டி பறக்கிறது. இந்த நிலையில், சோனியா காந்தி, திருநாவுக்கரசர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்