அமைச்சரவையில் இருந்து விலகியதால் மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸா? சிரோமணி அகாலிதளம் விளக்கம்

வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (07:40 IST)
அமைச்சரவையில் இருந்து விலகியதால் மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சிரோமணி அகாலி தள கட்சியின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாராளுமன்றத்தில் நேற்று 3 புதிய விவசாய மசோதாக்களை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்தே தான் ராஜினாமா செய்திருப்பதாக ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் ஹர்சிம்ரத் கவுர்விலகினாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
சிரோமணி அகாலிதளம் வழக்கம்போல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கும் என்றும் அரசுக்கு எந்தவிதமான நெருக்கடியையும் கொடுக்க விரும்பவில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 
 
இருப்பினும் மக்களவையில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதை தங்களது கட்சி விரும்பவில்லை என்றும் எனவே தங்களது அதிருப்தியை தெரிவிக்கும் வகையிலேயே ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்ததாகவும் சுக்பீர்சிங் பாதல் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்