தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை, கர்நாடக அரசு மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி, மத்திய அரசுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில், டெல்லியில் உள்ள ஷ்ராம் சக்தி பவனில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழகம் சார்பாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதன்பின் பேசிய சித்தராமய்யா “இதற்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தி விட முடியாது. அப்படி வழங்கினால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். 2015-16ஆம் ஆண்டு நீர்பருவ ஆண்டு கர்நாடகாவிற்கு மோசமாக அமைந்துவிட்டது. உண்மை நிலையை கண்டறிய நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.