குஜராத் அமைச்சர் மீது ஷூ வீசிய அரசு ஊழியர் கைது

வெள்ளி, 3 மார்ச் 2017 (06:05 IST)
குஜராத்தில் தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மாநில உள்துறை அமைச்சர் சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த போது அவர் மீது ஷூ வீசிய நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் குஜராத் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



 



குஜராத் சட்டசபைக்கு வெளீயே நேற்று மாலை அம்மாநில உள்துறை மந்திரி ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் ஜடேஜா மீது ‘ஷூ’வை எறிந்தார். நல்லவேளையாக அந்த ஷூ அவர் மீது விழவில்லை.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் உடனே அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர் காவல்நிலையத்திற்கு அந்த இளைஞரை அழைத்து சென்று விசாரித்த போது அவர் ஒரு அரசு ஊழியர் என்பது தெரியவந்தது. அரசு மீது அதிருதி அடைந்த காரணத்தால் இந்த செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.  

இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் சதிவேலை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதை மறுத்ததுடன் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தேர்தலில் மட்டுமே காட்டவேண்டும் என்றும் இதுபோன்ற அநாகரீக வேலையில் ஈடுபடக்கூடாது என்றும் கருத்து கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்