காலையில் சரிந்தாலும் மாலையில் உயர்ந்தது பங்குச்சந்தை!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:35 IST)
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் மீண்டும் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால் நேரமாக பங்குச்சந்தை மீண்டும் எழுந்து வந்தது என்பதும் இறுதியில் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இன்று மாலை மூன்று முப்பது மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவு பெற்றபோது சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 808 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 266 என்ற புள்ளிகளில் வர்த்தக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை மீண்டு வரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்