ரூபாய் நோட்டு பிரச்சனை: கலங்கடிக்கும் 6 அறிவிப்புகள்!

வியாழன், 17 நவம்பர் 2016 (13:12 IST)
நாளை முதல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வரம்பை 4500-இல் இருந்து 2000 ரூபாயாக மாற்றி அறிவித்துள்ளார் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ்.


 
 
கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் ஒழிப்பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனையடுத்து பல்வேறு குளறுபடிகள் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் மீண்டும் அடிமேல் அடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு, ஏற்கனவே 4500 ரூபாய் வரை மாற்றலாம் என இருந்ததை 2000 ரூபாயாக குறைத்து அதிர்ச்சி அளித்துள்ளது.
 
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
* பயிர்கடனுக்காக விவசாயிகள் வங்கிகளில் வாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
 
* பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைச் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
 
* திருமணச் செலவுக்காக ஒரு வங்கிக்கணக்கில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
 
* நாளை முதல் வங்கி கவுண்டரில் பழைய நோட்டுகள் மாற்றுவதற்கான வரம்பு 4500 ரூபாயிலிருந்து 2000-ஆகக் குறைகிறது.
 
* பதிவு செய்த வர்த்தகர்கள் ஒரு வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
 
* மத்திய அரசு ஊழியர்கள் தங்களது நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து ரூ.10,000 வரை எடுத்துக்கொள்ளலாம். இது 'சி' கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்