பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனியார் பள்ளியின் உதவியாளர் கைது

வெள்ளி, 24 அக்டோபர் 2014 (15:19 IST)
பெங்களூரு பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தனியார் பள்ளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பெங்களூரு பள்ளியில் மூன்றரை வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தனியார் பள்ளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதன் பேரில் தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்த குண்டப்பா என்பவரிடம் பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிறுமியிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டதால் குண்டப்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபடுத்தியுள்ளார். சம்பவம் நடைபெற்ற பள்ளியின் நிர்வாகத்தின் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி மழலையர் வகுப்புகள் நடத்தியது மற்றும் கன்னட மொழிக்கு பதிலாக ஆங்கில வழியில் வகுப்புகளை நடத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முன்னதாக பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஆர்ச்சிட் சர்வதேச பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மூன்றரை வயது சிறமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் வலுத்துள்ளதையடுத்தே காவல்துறையினர் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்