பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது

சனி, 19 நவம்பர் 2016 (16:49 IST)
தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, மாற்ற வந்த முதியவர் ஒருவர் வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், பலர் அதை தவறாக புரிந்து கொண்டு, மன உளைச்சல் மற்றும் நெஞ்சுவலி மற்றும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களால் இதுவரை 55 பேருக்கும் பேர் பலியானதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு மைசூரு வங்கி கிளையில், தன்னிடம் இருந்த பழைய நோட்டை மாற்றுவதற்காக, முதியவர் ஒருவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மாராடைப்பு காரணமாக அவர் மயங்கி கீழே விழுந்தார். சிறுது நேரத்தில் அவர் உயிர் பிறந்தது.
 
பண மாற்றம் தொடர்பாக, வங்கி வாசலில் கூட்ட நெரிசலில் சிக்கி, பல முதியவர்கள் பலியாவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்