உத்திரபிரதேச மாநிலத்தில் குண்டுகள் நிரப்பட்ட துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்த பெண், தன்னை தானே சுட்டுக் கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த மினு(35) என்பவர் நேற்று அவரது வீட்டில் கைத்துப்பாக்கியை வைத்து விதவிதமாக போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்துள்ளார்.
அந்த துப்பாக்கி குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்துள்ளது. துப்பாக்கி திடீரென்று வெடித்து படுகாயம் அடைந்தார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்ஃபி எடுப்பவர்கள் சிலர், உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுப்படுகின்றனர். செல்ஃபி தற்கொலை செய்து கொள்வதற்கு சமமானதாக மாறி வருகிறது. ஆனால் அதை இளைஞர்கள் சாகசமாக பார்க்கிறார்கள்.